2022ம் ஆண்டுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கிடையிலான பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெற்ற அலுவலக முகாமைத்துவ போட்டியில் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் 28 கிராமங்களை உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற உத்தியோகத்தர்களை அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரது சார்பிலும் பாராட்டி கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.
முதலாமிடம்:- J/77 மருதடி கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி. வரதராஜன் இந்துமதி
இரண்டாம் இடம்:- J/61 நெடுங்குளம் கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரான திரு.இரட்ணசிங்கம் றணேசன்.
மூன்றாம் இடம்:-J/74 யாழ் நகர் கிழக்கு திருமதி. ஆனந்தராஜா றஞ்சினி.
எதிர்காலத்திலும் இவர்களது கிராம மட்டத்திலான அர்ப்பணிப்புமிக்க சேவை இன்னும் வினைத்திறனாக அமையவேண்டும் என்பதுடன் எமது பிரதேச செயலகத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் அவர்கள் இதுவரை வழங்கிவரும் அனைத்து ஒத்துழைப்புகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ttt
 
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின்
இருநூறாவது அகவை ஆண்டினை முன்னிட்டு இடம்பெற்ற எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்து சமயஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2022 போட்டிகள் 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றன. வில்லுப்பாட்டு,பண்ணிசையும் பஜனையும், பேச்சு,பரதநாட்டியம், ,கதாப்பிரசங்கம், நீதி நூல் ஒப்புவித்தல், நாடகம்,சொல்லாடல்திறன் ஆகிய போட்டிகளில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
culture

யாழ்ப்பாண வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் தொடர்பான இரண்டாம் கட்ட செயலமர்வு நேற்று 09.05.2023 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வுக்கு வளவாளர்களாக உளநல வைத்திய நிபுணர் Dr.சிவதாஸ், யாழ் போதனா வைத்தியசாலை அவர்களும் ,வண.ஸ்ராலின் அடிகளார் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியிருந்தனர். ஐம்பது ஆசிரியர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டு நடைமுறையில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தொடர்பிலுள்ள உளரீதியான பிரச்சனைகள்,அதற்கன தீர்வுகள் பற்றி கலந்துரையாடி பயன்பெற்றுள்ளனர் .

counciling.jpg 12

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு....
தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2023 மே15ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல்,சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
 
weather
 
 
வடந்தை நூலுக்கான ஆக்கங்கள் கோரல்
விதிமுறைகள்:-
1.ஆக்கங்கள் அனைத்தும் வடக்கு மாகாணம் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.
2.அரசியல் கலப்பற்றதாக இருத்தல் அவசியம்.
3.தனிப்பட்ட நபரை பாதிக்காது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
4.ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
5.ஆக்கமானது அவரவர் சொந்த ஆக்கமாக இருப்பதனை உறுதிப்படுத்தல் வேண்டும்.
6.முன்னர் எந்த பத்திரிகைகளிலோ ,சஞ்சிகைகளிலோ பிரசுரிக்கப்படாத ஆக்கங்களாக இருத்தல் வேண்டும்.
7.கணனியில் தட்டச்சு செய்யப்பட்ட
(Font Size -12) மென்பிரதிகளை (Soft Copy) கீழே தரப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதுடன் அதன் வன் பிரதியினை அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவோ ,நேரடியாகவோ சமர்ப்பிக்கவும்.
8.A4 தாளில் 4 பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
9.கையெழுத்துப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
10.முடிவுத்திகதிக்கு பின்னர் கிடைக்கும் ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்.
தலைப்புக்கள்:-
1.உளரீதியான ஆற்றுப்படுத்தலில் கலைகளின் பங்கு.
2.வட மாகாண கலைகள் சர்வதேசம் நோக்கி பயணிப்பதற்கான ஏது நிலைகள்.
3.தமிழ்ப் பண்பாட்டில் மரபு வழிக் கல்வியின் வகிபாகம்.
4.தமிழர் வாழ்வில் கூட்டுக் குடும்பத்தினதும் தனிக்குடும்பத்தினதும் வகிபாகம்.
5.தமிழர் பாரம்பரியமும் உணவுப் பழக்க வழக்கங்களும்.
6.பொருளாதார மேம்பாட்டில் கலைகளின் பங்கு.
 
Scroll To Top