நாவாந்துறை தெற்குகிராம அலுவலர் பிரிவில் 21.04.2023 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு கரிதாஸ் கீயுடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிராம மட்ட உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் கடற்கரை தூய்மைப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது.இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் "மாண்புறு மாணவ சமுதாயம்" எனும் கருப்பொருளில் ஆளுமை மிக்க மாணவர் சமூகத்தினை உருவாக்கும் திறன் விருத்திப் போட்டிகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டி இன்று 26.04.2023 எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

"உயிரைக் காக்கும் உயரிய தானம்
உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்"
தற்போது எமது யாழ் மாவட்டத்தில் நிலவும் குருதித் தட்டுப்பாடு காரணமாக யாழ் .போதனாவைத்திய சாலை மருத்துவப் பிரிரிவினரால் விடுக்கப்பட்ட குருதிக் கொடைக்கான அவசர அழைப்பை ஏற்று எமது பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இன்று 24.04.2023 திங்கட்கிழமை குருதிக் கொடைப்பணியொன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது .எமது யாழ்பாண மாவட்ட செயலாளர் அவர்களும் இப் பணியை நேரடியாகப் பார்வையிட்டு கொடையாளர்களுடன் கலந்துரையாடினார்.இக் குருதிக் கொடையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் இணைந்து கொண்டிருந்தனர்.

கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் "மாண்புறு மாணவ சமுதாயம்" எனும் கருப்பொருளில் ஆளுமை மிக்க மாணவர் சமூகத்தினை உருவாக்கும் திறன் விருத்திப் போட்டிகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கட்டுரைப் போட்டி இன்று 24.04.2023 எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

2023 ஆம் ஆண்டிற்குரிய அரச இலக்கிய விருதிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.












