வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் (25.11.2024) யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது மழை வெள்ள அனர்த்தத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், நிவாரண உதவிகள் தொடர்பாகவும், நீர் தேங்கி நிற்கும் இடங்கள், அதனால் வரும் பாதிப்புக்கள், மக்களின் பாதுகாப்பு, தங்க வைக்கும் இடங்கள் தொடர்பான விடயங்கள் என்பன கலந்துரையாடப்பட்டன. பிரதேச செயலாளர் திரு. சாம்பசிவம் சுதர்சன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், சம்மந்தப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் உட்பட பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.



தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட யாழ்ப்பாண பிரதேச வெசாக் விழா-2024! யாழ்ப்பாண பிரதேச சம்மேளனம் மற்றும் எமது பிரதேச செயலகத்தின் பூரண ஒத்துழைப்புடன் இரு நாட்களைக் கொண்ட வெசாக் வேலைத்திட்டங்கள் பிரதேச மட்டத்தில் இடம்பெற்று நேற்றைய தினம் நிறைவு பெற்றன.







