"பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசைத் தடுப்போம்" எனும் தொனிப்பொருளில் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் மரநடுகை தினம் , பேண்தகு காணிமுகாமைத்துவ தினம், சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினம், நீர் மற்றும் நீர் மூலாதாரங்களைப் பாதுகாக்கும் தினம், உயிர் பல் வகைமை தினம் என்ற அடிப்படையில் பொதுமக்களின் பங்கு பற்றுதலுடன் களப்பணிகள் பல இடம்பெற்றன.

உலக சுற்றாடல் தினத்தையொட்டி எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் J/64 பாசையூர் கிழக்கு,மற்றும் J/84 நாவாந்துறை தெற்கு ஆகியவற்றில் "பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசைத் தடுப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட விலங்கியல் துறை மாணவர் சங்கத்தினருடன் இணைந்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் எமது உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.

"புகைத்தலிலிருந்து மீண்டதோர் நாடு - மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் கிராமம் " எனும் கருப்பொருளில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தின நிகழ்வு 2023.05.31 நேற்று எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. எமது பிரதேச செயலாளர் அவர்கள் இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்திருந்தனர்.

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான சங்கத்தினால் இன்று 2023.06.15 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு அலுவலக உத்தியோகத்தர்களுக்கு புற்றுநோய் தொடர்பான விழிப்புணரவுக் கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பீடு -2023 தற்போது களப்பணியில் எமது உத்தியோகத்தர்கள்!







