உத்தியோக பணி(நிலமெஹெர)
ஜனாதிபதி மக்கள் சேவை
யாழ்ப்பாணம்-2018
அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்பின் பேரிலும் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரம அவர்களின் ஆலோசனையின் பேரிலும் கௌரவ பாராளுமன்ற அமைச்சர் வஜிர அபேவHத்தன அவர்களின் வழிகாட்டலில் யாழ் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்களிலும் நடாத்தப்பட்ட பொதுமக்களுக்கான உத்தியோக பணி நடமாடும் சேவையானது ,2018-09-16 அன்று யாழ் மத்திய கல்லூரியில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ரி கொடிகார யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், விஜயகலா(பா.உ) , சேனாதிராஜா(பா.உ), முதலானவர்களின் பங்கேற்றலுடன் நடாத்தப்பட்டது.
இவ் நடமாடும் சேவையானது 2220 பொதுமக்களுடன் 2736 பதியப்பட்ட சேவைகளில் 600 சேவைக்கான தீர்வு அன்றைய தினத்திலேயே நிறைவு பெற்றது. 800 சேவைக்கான தீர்வு தொடர்ந்து வந்த நாட்களிலே நிறைபெற்றது. மேலும் இதர சேவைகளுக்கான தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
யாழ் பிரதேச செயலக கலாசார விழா 2018 மார்கழி மாதம் 13 ம் திகதி குருநகா் கலாசார மண்டபத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலா் திரு.பொன்னம்பலம் தயானந்தன் அவா்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.பிரதம விருந்தினராக கல்வித்திணைக்களம் வடக்கு மாகாண சிரேஷ்ட உதவி செயலாளா் திருவாட்டி அஞ்சலிதேவி சாந்தசீலன், அவா்கள் கலந்து சிறப்பித்தாா்.
இவ்விழாவில் ”யாழ் ரத்னா விருது” 7 மூத்த கலைஞா்களுக்கும் ,”இளங்கலைஞா் விருது” 7 கலைஞா்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.தேசிய கலை இலக்கிய போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவா்கள் ,கலைஞா்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |