சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திட்டப் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சமூக பாதுகாப்புச் சபையின் காசோலை 24.07.2023 நேற்று எமது பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டது.

பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் 17.07.2023 அன்று பி.ப 3.00 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.இதில் உதவிப் பிரதேச செயலாளர்,பாடசாலை அதிபர்கள்,SOND நிறுவனத்தின் பிரதிநிதி,SOS நிறுவனத்தின் பிரதிநிதி ,குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்,கிராம அலுவலர்கள்,சிறுவர் பகுதி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

முன்பிள்ளை அபிவிருத்திச் செயற்திட்டத்தினூடாக எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆ.வே மரியா முன்பள்ளி ,குருநகர் சனசமூக நிலைய முன்பள்ளி,Tiny Toy முன்பள்ளி ஆகிய மூன்று முன்பள்ளிப் பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்களுக்குரிய கதிரை, மேசை, அலுமாரி, சிறுவர்களுக்கான கதிரை,மேசை,முதலுதவிப் பெட்டி என்பன எமது செயலக முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் பிரதேச செயலாளரால் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

"அஸ்வெஸ்ம" நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்க வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல் ,வங்கிக் கணக்கு இல்லாத மற்றும் ஏற்கனவே உள்ள கணக்கின் செல்லுபடித் தன்மையை உறுதிப்படுத்தாத J/61-J/68 வரையான கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகள் இன்று 25.07.2023 காலை 9.00 மணிமுதல் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தமக்கான வங்கிக் கணக்கினை ஆரம்பித்தல், கணக்கின் செல்லுபடித் தன்மையை உறுதிப்படுத்தல் செயற்பாட்டிற்காக வருகைதந்துள்ளனர்.இலங்கை வங்கி,மக்கள் வங்கி,தேசிய சேமிப்பு வங்கி,பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளைகளில் பணியாற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் இவர்களுக்கான வங்கிக்கணக்கை ஆரம்ப வைப்புப் பணம் செலுத்தாமல் ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதுடன் அவர்கள் எமது அலுவலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து தற்போது இப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.








