எமது யாழ்ப்பாண பிரதேச செயலக சிறுவர் தினவிழா 01.09.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் செயலக மாநாட்டு மண்டபத்தில்மிகவும் சிறப்பாகமிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட செயலாளரும்,சிறப்பு விருந்தினராக சிறுவர் கழக( CCH) உறுப்பினரும்,கௌரவ விருந்தினராக மாவட்ட திட்ட முகாமையாளரும் (Offer Ceylon ) கலந்து சிறப்பித்திருந்தனர்.

J/64 J/65 கிராம அலுவலர் பிரிவிற்கான கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு அங்கத்தவர் கலந்துரையாடல் இன்றைய தினம் 26.09.2023 காலை11.00 மணிக்கு இடம்பெற்றது.

இன்று 22/09/2023 முதல் சகல வாகனங்களுக்குமான (மோட்டார் சைக்கிள்,முச்சக்கர வண்டி,கார்,லொறி,இரட்டை நோக்க வாகனம்,உழவு இயந்திரம்,உழவு இயந்திரம் பெட்டியுடன்) மூன்றாம் நபர் காப்புறுதியினை (கமத் தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபை) எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

செவிப்புலனற்ற மாணவர்களுக்கான வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் 4 நாட்கள்அடங்கிய பயிற்சிநெறியில் இறுதியாக எமது பிரதேச செயலகத்தில் சிறுவர் பங்குபற்றுதல் பங்களிப்புகளைஊக்குவித்தல் என்ற தலைப்பில் யாழ்நவீல்ட்பாடசாலை மாணவர்களுக்குரியபயிற்சியில்வளவாளராக வணபிதாMichae Prabulகலந்திருந்தார்.








