ஈழத்து சீரடியான் அறக்கட்டளையினரால் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 50 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

J/85 நாவாந்துறை வசந்தபுரம் கிராமத்தில் உரும்பிராய் சேர்ந்த நலன்புரி ஒருவரின் நிதி உதவியில் பொது நோக்கு மண்டபம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

J/78 அத்தியடி கிராம அலுவலர் அலுவலகத்தில் கிராம அபிவிருத்தி குழுக் கூட்டம் இடம்பெற்றது இதில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் , மாநகர சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் , பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். பிரிவின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவாந்துறை வடக்கு J/85 கிராம அலுவலர் பிரிவில் உள்ள வறிய கலைஞரை எமது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் சந்தித்து அவரை கௌரவித்து உதவி வழங்கியுள்ளனர்.

தொல்பொருட் திணைக்களத்தினால் யாழ்மாவட்டத்திலுள்ள திணைக்களங்களில் கடமையாற்றும வீரர்களுக்கான முதல் சுற்றில் சுப்பர் எட்டு அணியினுள் எமது யாழ்ப்பாண பிரதேச செயலக அணியும், தீவக வலய கல்வித் திணைக்கள அணியும் இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.







