வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் எமது யாழ்ப்பாண பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா 23.06.2023 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகி எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் மங்கல இசையுடன் ஆரம்பமாகியது.இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.உயர்திரு அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி.இராஜமல்லிகை சிவசுந்தரசர்மா(பிரதிப் பணிப்பாளர் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,வடக்கு மாகாணம் ,கௌரவ விருந்தினராக கலாபூஷணம்.குருசுமுத்து இராயப்பு அவர்களும் கலந்து கொண்டனர்.கலை நிகழ்வுகள் ,நூல் வெளியீடு,கலைஞர் கௌரவிப்பு,பரிசில்கள் வழங்கல் என்ற சிறப்பம்சங்களுடன் விழா நிறைவு பெற்றது.இந் நிகழ்வில் பெருமளவான கலைஞர்கள்,பாடசாலை மாணவர்கள்,கலை மன்ற மாணர்கள்,இளம் கலைஞர்கள்,பாசெய்யூர் கலையக கலைஞர்கள்,கலாசாரப் பேரவை உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

7

சர்வதேச போதைப்பொருள் துஸ்பிரயோக தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு!
சர்வதேச போதைப்பொருள் துஸ்பிரயோக தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையும் இணைந்து 26.06.2023 அன்று விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உதவி மாவட்ட செயலாளர் திருமதி கி.கமலராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வானது யாழ் குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோத்தியோகத்தர்கள்,சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர்கள்,அருட்தந்தைகள்,அருட்சகோதரிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது குடியிருப்பு தொடரில் உள்ள 270 குடுப்பங்களின் வீடுகளுக்கு சென்று 1927 இலவச சேவை இலக்கம் தொடர்பாகவும்,போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பாகவும் தனித்தனியாக குடும்பங்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.மாலை நிகழ்வாக சிறுவர் இளையோரை பாதுகாத்தல் தொடர்பாகவும்,அவர்கள் திறன்களை மேம்படுத்தல் தொடர்பாக அக்கிராமத்தில் உள்ள தலவைர்களுடன் கலந்துரையாடினர்.
0x
எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொதுமக்களுக்கான அறிவித்தல்!
நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளபயனாளிகளின் விபரங்கள் இணையத்தளம் ஊடாக வெளியிடப்பட்டதற்கமையபயனாளிகளின் பெயர் விபரங்கள் சகல கிராம அலுவலர் அலுவலகங்களிலும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.விண்ணப்பித்தும் தமது பெயர் விபரங்கள் பட்டியலில் இல்லாதவர்களும், பெயர் விபரம் வெளியிடப்பட்டிருந்தபோதும் தமக்குரிய கொடுப்பனவுத் தொகை தொடர்பான மேன்முறையீட்டைத் தெரிவிப்பவர்களும் கடந்த மாதம் 28 ஆம் திகதிமுதல் இன்று வரை எமது பிரதேச செயலகத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.அவர்களுக்கான பணிகளில் எமது உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்வரும் 10.07.2023 வரை பொதுமக்களாகிய நீங்கள்உங்களது மேன்முறையீடுகளை எமது அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
15
 
 
2
 
Scroll To Top