Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
அரசு சேவை மையங்கள்
முகப்பு
'நேர்மைக்கு வருடம்' 2020 தெரிவில் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர்சாம்பசிவம் சுதர்சன்
TISL இன் இன்டக்கிறிட்டி ஐக்கன் 'நேர்மைக்கு வருடம்' 2020 தெரிவில் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன் அவர்கள் நேற்றைய தினம் தனது அர்ப்பணிப்பான பொதுமக்கள் சேவைக்காக இவ் விருதினைப் பெற்றுக் கொண்டார்.இவ் விருதிற்காக வட பகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரச அதிகாரி என்ற தனித்துவத்தை உடைய இவர் இந்த விருதிற்கு மிகவும் தகுதிவாய்ந்தவர் என்பதில் எவருக்கும் எந்தவித ஐயமும் இல்லை .மக்கள் சேவைக்காக தன்னையே அர்பணித்து சேவையாற்றும் ஆற்றல் மிக்க இவரின் நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் என்ற வகையில் நாமும் பெருமிதம் அடைகின்றோம்.நமது பிரதேச செயலாளரின் நினைத்ததை உடன் முடிக்கும் செயலாற்றல் ,வெளிப்படைத் தன்மை,நேர்மை,சேவையில் அர்ப்பணிப்பு,மக்களை வழிநடத்தும் பக்குவம்,உத்தியோகத்தர்களை ஒன்றிணைக்கும் அன்பு போன்ற அசாதாதாரண ஆற்றல்கள் ஆகியவற்றுக்கு கிடைத்த இவ் விருதைப் பெறுவதற்கு தமது குறுஞ்செய்திகளை அனுப்பி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் விருதினைப் பெற உதவிபுரிந்த அனைத்து தரப்பினருக்கும் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்துயோகத்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்டர்கிரிட்டி ஐக்கன் 2020

பட்டதாரிப்பயிலுனர்களுக்கு கருத்தரங்கு
எமது பிரதேச செயலகத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிப் பயிலுனர்களுக்கு "Solidality "நிறுவனத்தின் அனுசரணையில் 19.01.2021,21.01.2021 ஆகிய திகதிகளில் பால் நிலை மற்றும் உளவளத்துணை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு பிரதேச செயலக சிறு மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 முதல் பி.ப 2.00 மணிவரை இடம்பெற்றது.இதில் மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி .உதயனி நவரத்தினம் மற்றும் எமது பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் திருமதி B.கிருஷாந்தி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.