எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் 22.03.2024 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு மூவேந்தர் சிறுவர் கழகத்தின் நிர்வாகத் தெரிவும், சிறுவர்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் எமது செயலக உத்தியோகத்தர்கள்.சிறுவர்கழகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

4.4

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் மாதாந்த விற்பனைச் சந்தை அலுவலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு இன்று அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

Local market1

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆயுர் வேத வைத்தியர்கள் மற்றும் ஆயுர்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டம் 14.03.2024 அன்று காலை 9.00 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலளர் தலைமையில் இடம்பெற்றது. இதில் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
ajur 2
எமது யாழ்ப்பாண பிரதேச செயலகமும் கலைத்தூது அழகியல் கல்லூரியும் இணைந்து நடாத்திய இசை ரசனை வேலைத்திட்டத்தினுடாக"ஹம்சப்பிரியா" கலைமன்றத்தில் மாணவர்களின் இசை ரசனை ஆற்றலை மேம்படுத்தல் நிகழ்வு 15.03.2024 வெள்ளிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு நடைபெற்றது.
2

நேற்று பெரதேனியா விவசாயத் திணைக்களத்தின் தாவர பாதுகாப்பு பிரிவினரால் மாவட்ட செயலக விவசாயபணிப்பாளரின் ஒழுங்கமைப்பின் கீழ் தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகளை பயன்படுத்தும் திட்டமானது நமது பிரதேச செயலகத்தின் J/61 நெடுங்குளம் பகுதி கிராம அலுவலர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

3

Scroll To Top