வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களமும் யாழ்ப்பாண பிரதேச செயலகமும் இணைந்து நடாத்த்திய மனைப்பொருளியல் டிப்ளோமா பாடநெறி மாணவிகளின் கண்காட்சி இன்று 12.02.2024 எமது பிரதேச செயலக திறந்த வெளி அரங்கில் காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி. பார்த்தீபன் கஜானி பணிப்பாளர்,கிராம அபிவிருத்தித் திணைக்களம் ,வடக்கு மாகாணம் அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி.சுதாகர் சுனேத்திரா மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.நிகழ்வில் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவிகளின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நம் நாட்டின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு பொது நிர்வாக, உள் நாட்டலுவல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைவாக 01.02.2024 தொடக்கம் 07.02.2024 ஆம் திகதி வரை நடாத்தப்படும் மரநடுகை வாரத்தின் அம்சமாக எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்படட கிராம அலுவலர் பிரிவுகளில் மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.இந்த வகையில் மருத்துவக் குணமுள்ள மூலிகை மரங்கள்,மற்றும் பழமரக்கன்றுகள் நாட்டப்பட்டு வருவதுடன் சிரமதானங்களும் இடம்பெற்று வருகின்றன. J/85 நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் பொதுமக்கள் பங்களிப்புடன் சிரமதானம் இடம்பெற்றது.

யாழ்.நீரிழிவுக்வகழகம் நடாத்தும் இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாம் நேற்றைய தினம் எமது யாழ்ப்பாணப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உத்தியோகத்தர்களின் நலன் கருதி மிகவும் சிறப்பாக ஒழுங்கு படுத்தப்பட்டு இடம்பெற்றது.இதில் நீரிழிவுப் பரிசோதனை ,இரத்த அழுத்தப் பரிசோதனை,உடற்திணிவுச் சுட்டிப் பரிசோதனை என்பன இடம்பெற்றன.


யாழ் நகரத்தை ஆரோக்கியமான நகரமாக்குதல் எனும் திட்டத்தின் கீழ் பிளாஸ்ரிக் பாவனையை பூச்சியமாக்குதல் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் விழிப்புணர்வுக் கலந்துரையாடல் 11.01.2024 வியாழக்கிழமை பி.ப 2.30 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் கள உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.







