யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசார பிரிவால் வெசாக் வார்த்தின் இரண்டாம் நாள் மரநடுகை வேலைத்திட்டம் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் 2023.05.03 ஆம் திகதி நடைபெற்றது. இவ் வேலைத்திட்டத்தில் பாதிரியார் ஸ்ரலின் இராசேந்திரம் அவர்களும் கலாசார பிரிவு உத்தியோகத்தர்களான திரு.இ.யோன்சன்,திரு.எஸ்.ரூபகுமார்,திருமதி.லி.சுபேந்தினி,அ.ரஜிதா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.tree 3

வெசாக் வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாளாகிய இன்று 03.05.2023 காலை 11.00 மணிக்கு
யா/விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான குழுச்செயற்பாடு எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.
drugs.jpg2

வெசாக் வாரத்தினை முன்னிட்டு எமது யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசாரப் பிரிவால் வெசாக் மரநடுகை வேலைத்திட்டம் 02.05.2023 அன்று பி.ப 4.00 மணிக்கு புனித யுவானியார் தேவாலயத்தில் இடம்பெற்றது.இதில் அத் தேவாலய பாதிரியார்,கிராம மட்ட அலுவலர்கள்,மாதர் சங்கத்தினர்,பிரதேச செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

tree

வெசாக் வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் யா/விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று 03.05.2023 காலை 10.00 மணிக்கு பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன ப் பயிற்சி நடைபெற்றது. இப் பயிற்சியின் வளவாளராக யோகப் போதனாசிரியர் திரு.சோ.முகுந்தன் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களும் ,பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

yoga.jpg3

யாழ்ப்பாண வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் தொடர்பான செயலமவர்வு இன்று 02.05.2023 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வுக்கு எமது யாழ் மாவட்ட அரசாங் அதிபர் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியிருந்தார்.மேலும் Dr.நா.பரமேஸ்வரன் பதிவாளர் ,சமுதாய மருத்துவத்துறை மருத்துவ பீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அவர்கள் இச் செயலமர்வில் தற்காலத்தில் நடைமுறை ரீதியாக
ஆசிரியர்கள் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் தொடர்பில் உளரீதியாக எதிர்நோக்கும் சவால்கள், அவைகளை எதிர்கொள்ள வேண்டிய வழிவகைகள் பற்றி எடுத்துக் காட்டுகளுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
counciling
 
Scroll To Top