தற்போதைய சூழ்நிலையில் யாழ் மாவட்டத்தில் வளி மாசடைந்துள்ளதால் பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருத்தல் அவசியமாகும்.
சுவாச மாசுக்களால் சுவாச நோய்கள் அஸ்மா, சுவாசப் புற்றுநோய், இதய நோய்கள், பாரிசவாதம் என்பன ஏற்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நாட்டின் பல பகுதிகளில் வளியின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக (08.12.2022) தேசிய கட்டிட ஆராய்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.
நேற்று பி.ப 7.30 மணி நிலவரப்படி யாழ் மாவட்டம் வளி தரக் குறியீட்டில் (AQI) முறையே 139 ஆக உள்ளது.
இது ஒரு ஆபத்தான நிலமையாகும்.இந்தியாவிலிருந்து வரும் மாசுபட்ட வளியானது இலங்கையின் வளிமண்டலத் தொகுதிக்குள் நுழைந்துள்ளதாகவும்,
அதனால், இலங்கையின் வடக்குப் பகுதி மற்றும் சில பகுதிகள் தற்போது வளியின் தரத்தில் கடுமையான ஆரோக்கியமற்ற தன்மையை எதிர்கொள்வதாகவும் NBRO தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வளிமாசடைவதினால் சுவாசம் சார்ந்த பல்வகை நோய்கள் ஏற்படல். குறிப்பாக அஸ்மா, சுவாப் புற்றுநோய், மார்புச்சளி, இருமல், கண்நோய் ஏற்படல், கண்பார்வை பாதிப்படைதல் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
விலங்குகள், கால்நடைகளின் மீள் உற்பத்தியாக்கல் பாதிப்படைதல், கால்நடைகளின் கண்பார்வை பாதிப்படைதல் மற்றும் தாவரங்களின் வளர்ச்சி, விளைச்சல் பாதிப்படைதல், இலைகளின் நிறம் மாற்றமடைதல் ஏற்படும்.
தூசு துகள்கள் வளியில் கலந்திருப்பதனால் பொருட்களை தெளிவாகப் பார்க்கமுடியாதவாறு தௌவற்ற தன்மை காணப்படும்.
அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருத்தல் அவசியமாகும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
முகக் கவசம் அணிதல் நன்று, வெளிப்புற காற்றைத் தவிர்க்க உங்கள் ஜன்னல்களை மூடுவது நல்லது, இயன்றளவு வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது.
ccc
09 டிசம்பர் 2022 அன்று காலை 05.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
மண்டூஸ் சூறாவளி தென்மேற்கு வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு வடகிழக்கே 240 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வட தமிழ்நாடு-நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு கரையோரத்தின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள்
டிசம்பர் 09 ஆம் தேதியின் போது மிகவும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் மிகவும் உயரமான அலைகள் எழ அதிக சாத்தியங்கள் காணப்படுகின்றது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் (சுமார் 2.5 – 3.5 மீ) வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால்
உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு மீனவ சமூகங்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளுக்கு மீனவ சமூகம் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வரை வீசுவதுடன்,
அம்பாந்தோட்டை ஊடாக காலி முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (65-75) வரை வீசக்கூடும்.
வட மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
sooo

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் ,கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.அந்நாளில் எமது அலுவலகத்திலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வருடந்தோறும் தீபங்கள் ஏற்றுவது போல் இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்தினை ஏற்றி அலுவலகத்தினை தீப ஒளியில் அலங்கரித்திருந்தனர்.

karthikai.jpg 8

J/62 கொழும்புத்துறை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் இன்று 2022-12-08 வியாழக்கிழமை 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சத்துணவுமா உருண்டைகள் வழங்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்திற்கு திரு.லயன் கஜேந்திரன் அவர்கள் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.

kolu

J/62 கொழும்புத்துத்துறை கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் இன்று 2022-12-08 வியாழக்கிழமை 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனையில் இருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. கருத்துக்களை யாழ்ப்பாணம் பொலீஸ் உத்தியோகத்தவர்கள் வழங்கினார்கள். இதில் பாடசாலை அதிபர், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

awarness.jpg 7

Scroll To Top