ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නNews & Events
රාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
சிறுவர்சமூகம்அமைப்புக்கள்நிர்மாணம்
புத்தசாசன மத அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சு ,கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய பாரம்பரியம் ,ஆற்றுகைக் கலை மற்றும் கிராமியக் கலை வளர்ச்சி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் ஆலோசனைக்கு அமைவாக உருவாக்கப்பட்ட அழகிய சிறுவர் சமூகம் அமைப்புக்கள் எமது பிரதேச செயலாளர் பிரிவில் கிராமங்கள் தோறும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இளம்தொழில்முனைவோர்களை ஊக்குவிபதற்காக அரசாங்கக் காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நேர்முகப் பரீட்சை
இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிபதற்காக அரசாங்கக் காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தன் கீழ் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டவர்களுக்கான தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை இன்று 24.02.2021 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி எமது பிரதேச செயலக சிறு மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.இதில் 53 விண்ணப்பதாரிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
மனைப் பொருளியல் டிப்ளோமா பாடநெறி மாணவிகளின் கண்காட்சி
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலைய மனைப் பொருளியல் டிப்ளோமா பாடநெறி மாணவிகளின் கண்காட்சி இன்று 23.02.2021 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கடற்கரை வீதி,நாவாந்துறையில் அமைந்துள்ள சென்மேரீஸ் சனசமூக நிலையத்தில் பிரதேச செயலாளர் திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.கில்பேட் குணம் பிரதம கணக்காளர் (மவட்டச் செயலகம்,யாழ்ப்பாணம்),சிறப்பு விருந்தினராக திரு.நா.பஞ்சலிங்கம் (மவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,யாழ்ப்பாணம்)ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக இங்கு பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கிராமிய சுற்றாடல் குழுக்கூட்டம்
சுற்றாடல் அமைச்சின்(2021.01.02 ) சுற்று நிரூபத்திற்கமைய கிராம அலுவலர் பிரிவிலுள்ள சுற்றாடல் சார்ந்த பிரச்சனைகளை இனங்காணல், மற்றும் அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளுதல்,கிராம அலுவலர் பிரிவுகளில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்போது சுற்றாடல் சார்ந்த அழிவுகளை குறைத்தல்,சுற்றாடல் சார்ந்த கிராம மக்களின் அறிவினை விருத்தி செய்தல் தொடர்பான கிராமிய சுற்றாடல் குழுக்கூட்டம் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராமஅலுவலர் பிரிவுகளிலும் இடம்பெற்று வருகின்றது.