28.09.2022 இன்று J/86 சோனகதெரு தெற்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் காலை10.15 மணிக்கு கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மையக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பொதுச்சுகாதார பரிசோதகர் ,குடும்ப நல உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மாநகரசபை , பாடசாலை அதிபர் மற்றும் கிராம மட்ட சமுக அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள் பள்ளிவாசல் சார் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய வெளிநாட்டு வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வமுள்ளவர்களுக்காக கடந்த 14,15,16 ஆம் திகதிகளில் செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் உத்தியோகத்தர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 138 இளைஞர்,யுவதிகள் பங்குபற்றி தமக்கான தகவல்களை வழங்கி ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டனர்.

ஈழத்துச் சீரடியான் அறக்கட்டளை நிதியத்தால் J/61 நெடுங்குளம், J/83 கொட்டடி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மிகவும் நலிந்த நிலையில் உள்ள 20 குடும்பங்களிற்கு உலர் உணவுப் பொதிகள் 18.09.2022 அன்று வழங்கிவைக்கப்பட்டன .








