யாழ் நகரின் கோட்டைப் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் விரும்பத்தகாத செயற்பாடுகளைத் தவிர்க்குமுகமாக யாழ்ப்பாணத் தொல்லியல் திணைக்களத்துடன் யாழ்ப்பாணமாநகர சபையும் இணைந்து 14.10.2022 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு கோட்டை சுற்றுவட்டாரத்தில் நடாத்திய சிரமதானப் பணியில் எமது அலுவலர்களும் பங்குபற்றியிருந்தனர்.

IMG 9214 1

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 11.10.2022 அன்று இடம்பெற்றது. கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது சுகாதாரப் பரிசோதகர், டெங்குக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

denku

 

J/86 சோனகதெரு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் சமுக சேவை திணைக்களத்தினூடக தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிப் பயனாளி ஒருவருக்கான ILO நிதியுதவியுடனான SIYB இரு நாட்கள் பயிற்சி நடைபெற்றது.

2

வாசித்தல் மற்றும் எழுதுதல் மூலமாக விசேட தேவையுடையோருக்கான சாரதி அனுமதிப் பரீட்சையும் அத்துடன் மருத்துவச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளல்.
சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்.
தனிப்பட்ட மோட்டார் கோச்சினை ஒமினிபஸ் ஆக மாற்றம் செய்தல்.
வாகனப் பதிவுப்புத்தகத்தில் மாற்றம் செய்தல்.
வாகன இலக்கத்தகடு பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள்.
வாகன உடமை மாற்ற விண்ணப்பங்கள் கையேற்றல் .
2014 2015 ஆம் ஆண்டு செயற்றிட்டத்தின் ஊடாக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களின் நிபந்தனைகளை நீக்குதல்.
வாகன நிறைசான்றிதழ் பெற்றுக் கொள்ளுதல்.
இதுவரை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தீர்க்கப்படாத நிலுவைகள்.
வாகன வருமானவரி தொடர்பானவை.
 
fb
Scroll To Top