இன்று 01.12.2023 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண பிரதச செயலக திறந்த வெளி அரங்கில் காலை 9.00 மணிமுதல் சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் நூல் வெளியீடும் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எமது பிரதேச செயலாளர் ஆலோசனையிலும் வழிகாட்டுதலிலும் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு எமது அரசாங்க அதிபர் உயர்திரு.அம்பலவாணர் சிவபால சுந்தரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திரு.சாமுவேல் பூலோகசிங்கம்(WorldVisionஅமைப்பு,யாழ்ப்பாணம்)அவர்களும்,திரு.எஸ்.சந்திரகுமார்(தலைவர்,தமிழ்விருட்சம்,வவுனியா) அவர்களும், கௌரவவிருந்தினராகவைத்தியகலாநிதிதிருமதி.ஜெ.கணேசமூர்த்தி(இயக்குனர்,ஜெயப்பூர்சுண்டிக்குளி)அவர்களும்,செல்வி.அமராசோமசுந்தரம்(அதிபர்,நவீல்ட்பாடசாலை,கைதடி)அவர்களும்,திரு.இலங்கைநாதன் சித்திராங்கன் (புதிய வாழ்வு நிறுவனம் ,கிளிநொச்சி) அவர்களும் செல்வி.விஜிதா நாகேந்திரம் (இயக்குனர்,விது நம்பிக்கை நிதியம்,யாழ்ப்பாணம்) அவர்களும் கலந்து சிறப்பித் திருந்தனர். இந் நிகழ்வில் நவீல்ட் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம்,தேயிலைக் கொழுந்து நடனம் என்பனவும்,வாழ்வகம் அமைப்பினரின் வாத்திய விருந்து,நவீல்ட் பாடசாலை ஆசிரியர்களின் நாடகம்,சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக் குழுவினரின் பார்வதி திருக்கல்யாணம் வில்லுப்பாட்டு,பக்திப் பாடல்கள் போன்ற கலைநிகழவுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன. நிகழ்வின் சிறப்பம்சமாக மாற்றாற்றலுடையவர்களின் கவிதை,கட்டுரை,சிறுகதை,நாடகம் ஆகிய ஆக்கங்களைத் தாங்கி புதுப்பிரவாகம் என்ற நூல் வெளியீடும்,செவிமஞ்சரி வெளியீடும் செய்து வைக்கப்பட்டது.நிகழ்வில் கிராமிய மட்ட சுய உதவிக்குழு மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர் கௌரவிப்பும், ,மாற்றாற்றலுடையோருக்கான கௌரவிப்பும், சான்றிதழ் வழங்கலும் பதக்கம் அணிவித்து பரிசில் வழங்குதலும் இடம்பெற்றது. நிகழ்வில் கிராம மட்ட அமைப்புக்கள் ,பொதுமக்கள்,உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களுக்கான நிதி அனுசரணையை WorldVision அமைப்ப்பினர் வழங்கியிருந்தனர்.








