எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள முதியோர் சங்கங்களின் பொருளாளர்களாக அங்கத்துவம் வகிக்கின்றவர்களுக்கு சங்கங்களின் நிதி நடவடிக்கைகளை எவ்வாறு வினைத்திறன் மிக்க வகையில் மேற்கொள்வது என்பது பற்றிய விழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஒன்று இன்று
21.06.2023 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.சமூக பராமரிப்பு பிரிவினரால் ஒழுங்கு படுத்தப்பட்ட இக் கலந்துரையாடலுக்கு எமது
பிரதேச செயலகத்தின் கணக்காளர் திரு.க.ஸ்ரீதரன் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டுள்ளார்.
