எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய வெளிநாட்டு வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வமுள்ளவர்களுக்காக கடந்த 14,15,16 ஆம் திகதிகளில் செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் உத்தியோகத்தர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்வில்
பங்குபற்றிய இளைஞர்,யுவதிகளிற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக வடக்கு மாகாண சிரேஸ்ட முகாமையாளர் ,யாழ் மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பொறுப்பாளர், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முகவர்கள்,எமது பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தைச் சார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளடங்கிய காணொளி கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் 81 இளைஞர்,யுவதிகள் ஆர்வத்துடன் இணைந்து கொண்டிருந்தனர்.







