"தேவை நாடுவோருக்கான சேவை"நலன்புரி நன்மைகள் சபை நிதி ,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு நலத்திட்டஉதவியாளர்களைப் பெறுவதற்குத் தகுதியான நபர்களை அடையாளம் காணுதல் என்ற 2022 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கத்தைக் கொண்ட நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய,சகல நலன்புரி நிவாரண நன்மைக் கொடுப்பனவின் பொருட்டு தகுதியான நபர்களை அடையாளம் காணுவதற்குரிய அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு ஏற்ற வகையில் எமது பிரதேச செயலாளர் தலைமையில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அதனுடன் தொடர்பு பட்ட ஏனைய உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 10.00 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

nalanpuri.jpg 1

எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் வேலைத்திட்டத்தில் தற்கால சூழலில் அரச உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும் வகைப்படுத்தல்கள்,தெரிவுகளின் அடிப்படையில் எவ்வாறு வேலைவாய்புக்களை இணையத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்பது பற்றியும், அதற்காக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் பற்றியதுமான உத்தியோகத்தர்களுக்குரிய ஒரு விழிப்புணர்வுக் கருத்தமர்வு எமது பிரதேச செயலாளர் தலைமையில் செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் ஒழுங்கு படுத்துதலின் கீழ் இடம்பெற்றது.

for3

தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களமும் சிறுவர் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களமும் இணைந்து செயற்படுத்தும் வேலைத்திட்டத்திற்கமைவாக யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்குட்பட்ட J7/6,J/62ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த அழகிய சிறுவர் சமூக /கழக முப்பது சிறார்களுக்கு 04.09.2022 நேற்றைய தினம் மரக்கறி நாற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

vegetable

 

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் கிடைக்கக்கூடியதாகவுள்ள வெளிநாட்டு தொழில்வாய்ப்புத் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று NAITA நிறுவனத்தில் RPL தரச்சான்றிதழ் பெறுவோருக்கு 11.08.2022 வியாழக்கிழமை எமது பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு இடம்பெற்றது.

FOREN 1

Scroll To Top