கடந்ந 29.10.2022 சனிக்கிழமை அன்று யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் காலை 8.00 மணிக்கு நடைபெற்ற வடக்கு மாகாணப் பண்பாட்டு பெருவிழாவில் துறை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பத்துக் கலைஞர்கள் கலைக்குரிசில் விருது,இளங்கலைஞர் விருது,சிறந்த நூலுக்கான விருது என்பன வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். இக் கலைஞர்கள் எமது பிரதேசத்தில் கலை, இலக்கிய,பண்பாட்டுத் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்பிற்காக பெற்றுக் கொண்ட இவ் விருதுக் கௌரவிப்பிற்கு எமது பிரதேச செயலகத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், தொடரந்தும் இவர்கள் தமது பணியில் எமது பிரதேச கலை,இலக்கிய, பண்பாட்டுத் துறைகளுக்கு பங்காற்ற வேண்டும் என்பது எமது விருப்புமாகும்.விருதைப் பெற்றுக் கொண்ட கலைஞர்கள் விபரம்:-
திரு.யோசப் யோண்சன் ராஜ்குமார்- சிறந்த நூலிற்கான விருது
கலைக்குரிசில் விருது:-
திரு.செபஸ்தியாம்பிள்ளை யோசப்பாலா-சிறுகதை
திரு.கிளமென்ற் மாட்டீன் நெல்சன்-நாடகம்
திரு.அறுக்காஞ்சிப்பிள்ளை மரியதாஸ்-கூத்து
திரு.சரவணமுத்து முருகையா-கவிதை இலக்கியம்
திரு.பிரான்சிஸ் டொமினிக்-ஒப்பனைக்கலை
இளங்கலைஞர் விருது:-
திரு.றோயல் வின்ஸ்டன் ஜெறாட் நிரோஷன்-குறும்படம்
திருமதி.கிருஷ்ணாலினி அகிலன்-வாத்தியக்கலை
திருமதி.மேவிஸ் ஜீன்சியா யூட் அல்போன்சஸ்-கூத்து
செல்வி.தர்சினி ஞானேந்திரன்-கிராமியக்கலை
DSC 0753
 
கலைஞர்களாகிய உங்களுக்கு இதோ ஓர் அரிய சந்தர்ப்பம் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கலைஞர்களுக்குரிய தரவுத்தளம் ஒன்றை தாபித்து கலைஞர்களின் விபரங்களை பதிவு செய்கின்றது.
www.heritage.gov.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.
இதன் மூலம் கலைஞர்களுக்கு உதவும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ள இலத்திரனியல் அடையாள அட்டையினையும் பெற்றுக் கொள்ளும் வசதியினை யும் வழங்குகின்றது.
artistartist1

எமது யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடல்நீரேரிப் பகுதிகளில் கடலட்டை மற்றும் கொடுவா மீன் வளர்ப்புப் பண்ணைகள் அமைத்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்களில் மாகாணக்காணி ஆணையாளரின் (வடக்கு காகாணம்) அனுமதி கிடைக்கப் பெற்றவர்களுக்கு பண்ணை அமைந்துள்ள அரச காணிகளிற்கான வருடாந்த அனுமதிப்பத்திம் 19.10.2022 நேற்று பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.

1

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளிலே தொடர்ச்சியாக கிராம மட்ட உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள்,குடும்பநல உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள்,கிராமங்களிலுள்ள டெங்குக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்கள் சென்று டெங்கு நோய் தொடர்பாக விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

4

Scroll To Top