காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்,மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலகம் யாழ்ப்பாணத்தினால் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதிய சோனகதெரு கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்கான காணிப் பயன்பாட்டுத்திட்டம் தொடர்பான நூல் தயாரிக்கப்பட்டு பிரதேச செயலாளரினால் நேற்று அக்கிராம அலுவலர் பிரிவின் கிராம உத்தியோகத்திரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

land 861

காணாமற்போன அல்லது சேதமடைந்த (O/L), (A/L) பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள மீண்டும் பெறுவது எப்படி? (விபரம்)
காணாமற்போன, சேதமடைந்த (O/L), (A/L) பரீட்சை பெறுபேறுகளை இவ்வாறு பெறலாம்!
மற்றவர்களும் பயனடைய #அதிகம் #பகிருங்கள்
காணாமற்போன மற்றும் சேதமடைந்த (O/L), (A/L) பரீட்சை பெறுபேறுகளை (Results Sheet) எவ்வாறு பரீட்சைகள் திணைக்களத்தில் பெற்றுக் கொள்வது?
கொழும்பு , பத்தரமுல்ல உள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் இதற்காக தனியான பிரிவு உள்ளது. அங்கு சென்று பெற்றுக் கொள்ளளாம்.
இதற்கான கருமபீடம் வேலை நாட்களில் மு.ப. 9.00 – பி.ப. 3.00 மணி வரை திறந்திருக்கும். ஒரே நாள் சேவை மற்றும் சாதாரண சேவை என இரு விதமாக சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஒரே நாள் சேவை:
கட்டணம் ரூ. 600.00
மேலதிக பிரதி ஒவ்வொன்றுக்கும் ரூ. 300.00
சாதாரண சேவை கட்டணம் ரூ. 350.00
மேலதிக பிரதி ஒவ்வொன்றுக்கும் ரூ. 200.00
கொண்டு செல்ல வேண்டிய ஆவனங்கள்:
பாடசாலை பரீட்சாத்தி:
பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்திய கடிதம்
( தோற்றிய வருடம், சுட்டெண், அடையாள அட்டை உறுதிப்படுத்தப்பட வேண்டும்)
தனிப்பட்ட பரீட்சாத்தியாக பரீட்சைக்கு தோற்றி இருப்பின் பரீட்சை சுட்டெண், அடையாள அட்டை , கிராம அலுவலரின் உறுதிப்படுத்திய கடிதம்.
தனிப்பட்ட பரீட்சாத்திகள் சுட்டெண் மறந்தால் பிரச்சனை இல்லை… அடையாள அட்டை பரீட்சைக்கு தோற்றிய ஆண்டு குறிப்பிட்டால் போதுமானது…
இலகுவாக O/L மற்றும் A/L பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுகொள்ளலாம்!!
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் ஒன்லைன் மூலமாக 2001 இல் இருந்தான பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை (O/L மற்றும் A/L பரீட்சை பெறுபேறுகள்) பெறும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள கீழ் உள்ள இணையதளத்திற்க்கு விஜயம் செய்யுங்கள்.

முதியோருக்கான தேசிய செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் "திரிய பியச" வீடமைப்பு திட்டத்தின் கீழ் J/74, யாழ்நகர் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு 2022/11/02 நேற்று சுபநேரத்தில்எமது பிரதேச செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டு பயனாளி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் அப் பிரிவிற்குரிய கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ,வணக்கத்திற்குரிய மதகுரு , பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் , மற்றும் கிராமிய முதியோர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

open house

"வனிதாபிமான" வடக்கின் சிறந்த பெண் உற்பத்தி முயற்சியாளருக்கான விருது" 2022 இல் J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள வசந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் ச.பிரியதர்ஷினி அவர்கள் தெரிவு செய்யப்பட்டு வடக்கின் சிறந்த பெண் உற்பத்தி முயற்சியாளருக்கான விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.அவரை எமது பிரதேச செயலகத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

self

Scroll To Top