இன்று 04.02.2022 வெள்ளிக்கிழமை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரினால் காலை 8.19 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதத்துடனான மரியாதை செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.நாடு சுதந்திரமடைந்ததற்கு முன்னரான காலங்களும் சுதந்திரத்திற்கு பின்னர் நாடு எதிர் நோக்கிய சவால்களும் அதற்காக பாடுபட்டவர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறிய பிரதேச செயலாளர் குறிப்பாக கொவிட் 19 நிலமை காரணமாக சரிவடைந்த பொருளாதார நிலமையினை வலுப்படுத்தி அதன் மூலம் பொதுமக்களுக்கு நிறைவான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் சகல திட்டங்களையும் எமது பிரதேசத்தில் மிகவும் வினைத்திறன் மிக்க வகையில் நடைமுறைப் படுத்துவதற்கும், இன,மத பேதம் கடந்து நாம் அனைவரும் நாட்டின் இறைமைக்கும், முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி தற்போதைய நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க உறுதிபூணுவோம் எனவும் தனது உரையில் வலியுறுத்தினார்.தொடர்ந்து அலுவலகச் சூழலில் மரநடுகையும் இடம்பெற்றது.
இலங்கைத் திருநாட்டின் 74வது சுதந்திரதின நல்வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
002
50
22

இன்று 03.02.2022 வியாழக்கிழமை வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலைய மனைப் பொருளியல் டிப்ளோமா பாடநெறி மாணவிகளின் கண்காடசி காலை 10.00 மணிக்கு பாசையூர் சென் அன்ரனிஸ் திருமண மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இதில் பிரதம விருந்தினராக திரு.இ.சிவரூபன் பிரதம கணக்காளர் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்,அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.இ.சசீலன் மாகாணப் பணிப்பாளர் கிராம அபிவிருத்தித் திணைக்களம் வடக்கு மாகாணம்,அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.நா.பஞ்சலிங்கம் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பயிற்சி நெறி மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.இப் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்த மாணவர்களின் கைவினைப் பொருடகள் கண்காட்சிக்காக அழகுபடுத்தப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கான டிப்ளோமாச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

nadacut

walk 3

group

 

 

நாளை "நாடு முழுவதும் கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் வேலைகள்" என்ற திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.

நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இத்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

12. 'கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம் வேலைகள்' கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம்

உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கமைய 'கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இட்சம் வேலைகள்' கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் 336 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக 14,021 கிராம அலுவலர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் தேவைகள் பொதுமக்களாலேயே அடையாளங் காணக்கூடிய செயன்முறையை முழுமையாகப் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை 2022 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தேவையான தயார்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை தெரிவித்து நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையால் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

FGFG

 

 

நாடு முழுவதும் "கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம் வேலைத்திட்டம்"பற்றிய ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 03.02.2021 வியாழக்கிழமை எமது யாழ்ப்பாண பிரதேச செயலக செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு Zoom செயலியுடன் இணைந்து சிறப்பாக இடம்பெற்றது. கௌரவ அங்கஜன் இராமநாதன் ,பா.உ,பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் ,இணைத்தலைவர்,யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எமது யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ,பிரதம கணக்களர் ,உதவித்திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட 28 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இன்று சுபநேரமாகிய காலை 8.52 மணிக்கு இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இவ் வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் தேவைகள் பொதுமக்களாலேயே அடையாளங் காணக்கூடிய வகையில் பன்முகப்படுத்தப்பட்டு எதிர்காலத்திற்கான கிராமங்களின் அபிவிருத்தி வலுவாக்கப்படுகிறது எனலாம்.
2
 
10
6

இன்று 01.02.2022 செவ்வாய்க்கிழமை "வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் வேலைகள்" என்ற அடிப்படையில் கிராமிய அபிவிருத்தித்திட்டம் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடலும் அதற்கான ஆவணங்கள் கையளித்தல் நிகழ்வும் எமது யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கௌரவ அங்கஜன் இராமநாதன் பா.உ,பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் ,இணைத்தலைவர்,யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இதில் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் , பல பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

1 ladsam.jpg 00

1 ladsam.jpg 0000

1 ladsam.jpg 12

Scroll To Top