C Quest நிறுவன உதவியுடன் SOND நிறுவனத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வினைத்திறனான அடுப்புக்களை வழங்கும் திட்டத்தினூடாக J/81 கிராம சேவகர் ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு நகர்த்தக்கூடிய ஒரு குடும்பத்திற்கு 2 வீதம் வழங்கப்பட்டது.

aduppu

எமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொருளாதார புத்தெழுச்சிகுழுவின் ஏற்பாட்டில் 09.01.2023 J/83 கிராம அலுவலர் பிரிவில் வில்லூன்றி வீரகத்தி முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக்கஞ்சிவழங்கப்பட்டதுடன் பெற்றோர்களுக்கும் போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வு பொது சுகாதார மாதுவினால் நிகழ்த்தப்பட்டது.health1

எமது நாட்டின் 75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு 08.01.2023நாவாந்துறை தெற்கு J/84 பிரிவில்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சகவாழ்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு கரிதாஸ் கீயுடெக் நிறுவனத்தில் அனுசரனையில் இடம்பெற்றது.
hari1

எமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொருளாதார புத்தெழுச்சிகுழுவின் ஏற்பாட்டில் 09.01.2023 J/83 கிராம அலுவலர் பிரிவில் மிகவும் நலிந்த நிலையில் உள்ள 10 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நலன் விரும்பி ஒருவரால் பொங்கல் பானைகள் வழங்கப்பட்டது.

pon1

எமது கிராம அலுவர் (நிர்வாகம்) அவர்களுக்கு நிறைவான நல்வாழ்த்துக்களும் ஆசிகளும்....
அரச சேவையில் கடமையாற்றி 60 வயதினை நிறைவு செய்து இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்லும்
எமது கிராம அலுவர் (நிர்வாகம்) அவர்களுக்கு அலுவலக குடும்பத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
திரு யோண்பிள்ளை பத்திநாதன் அவர்கள் 19.11.2014-31.12.2016 அன்று அரச சேவையில் எமது பிரதேச செயலகத்தில் கிராம அலுவலராக இணைந்து கொண்டார்.பின்பு 01.01.2017- 31.12.2022 வரை கிராம அலுவர் (நிர்வாகம்) ஆகக் கடமையாற்றினார்.
இவர் எமது அலுவலகத்தில் மட்டுமன்றி ஊர்வாகற்றுறைப் பிரதேச செயலகத்திலும் கிராம அலுவலராக மிகவும் சிறப்பாக பணியாற்றியவர்.
எமது நாட்டின் உள்நாட்டு யுத்த காலங்களிலும்
எமது யாழ்ப்பாண மக்களுக்காக மிக உன்னதமாகவும், நேர்மையுடனும் பணியாற்றிய ஒரு சிறந்த அரச சேவையாளன்.
தனது பல வருட அரச சேவைக் காலத்தில் சேவை நாடி வரும் எந்தவொரு பொது மகனுடனும் சக அலுவலருடனும் உள்ளம் வேதனைப்படும்படி நடந்து கொள்ளாத இவர் கடமைக்கு நேரம் தவறாமை , அலுவலக பொது நிகழ்வுகளில் பொறுப்புடன் பணிசெய்தல்,கிராம அலுவலர்களை மட்டுமன்றி எல்லா உத்தியோகத்தர்களுடனும் ஒற்றுமையாக கடமை புரிதல் என ஒரு சிறந்த மனிதனாக விளங்கினார்.
யுத்தகாலத்தின் அவசரவேளைகளிலும் , கொவிட் நோய்த் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற பல சவால்கள் மிகுந்த நேரத்திலும் எவ்வித ஓய்வுமின்றி தனது அர்ப்பணிப்பான சேவையை வழங்கிய ஒரு சிறந்த சேவையாளன்.
இவர் பல வருட காலம் அரச சேவையில் தமது நிறைவான சேவையினை வழங்கி இன்றுடன் தமது 60 வயதினைப் பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் வேளையில் இவரது எதிர்காலம் சிறக்க எமது அலுவலக குடும்பத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிப்பதுடன் தேக ஆரோக்கியத்துடனும் இறைவனின் ஆசீர்வாதத்துடனும் குடும்ப சந்தோசமாக வாழ வாழ்த்துகிறோம்.IMG 4691
 
Scroll To Top