J/86 சோனகதெரு தெற்கு கிராம அலுவலர்பிரிவில் டெங்கு நுளம்பின் பரவலைத் தடுக்குமுகமான
விசேட டெங்குக் கட்டுப்பாட்டு செயற்திட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றன. இவ் வேலைத்திட்டங்களில் பாடசாலை சமூகத்தினர்,பொது சுகாதாரப் பரிசோதகர்,குடும்பநல உத்தியோகத்தர்,கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

வெப்பக் குறியீடு, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை வெப்பக் குறியீட்டில் சில இடங்களில் 'எச்சரிக்கை' அளவு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும், வடக்கு மற்றும் வடக்கில் சில இடங்களில் 'எச்சரிக்கை' நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் "மாண்புறு மாணவ சமுதாயம்" எனும் கருப்பொருளில் ஆளுமை மிக்க மாணவர் சமூகத்தினை உருவாக்கும் திறன் விருத்தி மாவட்ட மட்டப்
போட்டிகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கட்டுரைப் போட்டி,மற்றும் சித்திரப்போட்டி என்பன இன்று 18.05.2023 எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு
ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

J/81 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள யாழ் மத்திய கல்லூரியில் அதிபர் தலைமையில் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் பாடசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் நேறறு 16.05.2023 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.







