எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள முதியோர் சங்கங்களின் பொருளாளர்களாக அங்கத்துவம் வகிக்கின்றவர்களுக்கு சங்கங்களின் நிதி நடவடிக்கைகளை எவ்வாறு வினைத்திறன் மிக்க வகையில் மேற்கொள்வது என்பது பற்றிய விழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஒன்று இன்று
எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு நேற்று செவ்வாய் கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இச் செயலமர்விற்கு வளவாளராக யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்.திரு. ம.பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு சிறந்த எடுத்துக்காட்டுகளுடனான தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் எமது யாழ்ப்பாண பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா -2023.












