கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 25.02. 2024 ஞாயிற்றுக்கிழமை நாவந்துறை சென் நீக்கிலஸ் ஆலயத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு நடைபெற்றது.


எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப்பொருட்களின் சந்தைப்படுத்தலுக்கு களமமைத்துக் கொடுக்கும் வகையில் எமது அலுவலக வளாகத்தில் மாதாந்தம் இடம் பெறும் சந்தை இன்று இடம்பெற்று வருகின்றது.

J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள மகளிர் விவகார குழு கலந்துரையாடல் 28.02.2024 அன்று இடம்பெற்றது. இதில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், அங்குள்ள மகளிர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

தொம்பே மற்றும் யாழ்ப்பாண பிரதேசங்களைச் சேர்ந்த சமுர்த்தி "கெக்குளு" சிறுவர் கழக சிறுவர்களிடையே இன நல்லிணக்கம் மற்றும் கலாசார புரிந்துணர்வை பரஸ்பரம் உருவாக்கும் வகையிலான ஒரு நிகழ்ச்சி எமது யாழ்ப்பாண பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினரால் சிறப்பாக ஒழுங்கு படுத்தப்பட்டு 23.02.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் வேலைத்திட்டத்தின் முதலாவது செயற்திட்டமாக பண்ணை கடற்கரையோரப் பிரதேசத்தில் காலை 6.30-7.30 மணிவரை சிரமதானப்பணி இடம்பெற்றது. தொடர்ந்து 8.00 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலக சூழலில் மரம் நடுகை இடம்பெற்றதுடன் இரண்டு பிரிவினரும் இணைந்த வகையில் யாழ்.பொலீஸ் நிலைய வளாகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் 8.30-10.30 வரை நட்புரீதியான கிரிக்கட் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.இறுதியாக பி.ப 1.30 மணிக்கு எமது செயலக மாநாட்டு மண்டபத்தில் கலைநிகழ்வுகளுடன் இணைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.






