எமது பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரால் J/75 சுண்டுக்குளி கிராம அலுவலர் பிரிவில் உள்ள தையல் பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சி பெறும் யுவதிகளுக்கான தையல் இயந்திரம் திருத்தும் பயிற்சி நெறியொன்று இன்று 16.05.2024 காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிறுவர் கழகங்களைச் சேர்ந்த 200 பிள்ளைகளுக்கான பிரதேச சிறுவர் சபை நிர்வாகத் தெரிவு நேற்று 16.04.2024 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதனைத் தொடர்ந்து அச் சிறுவர் கழகப் பிள்ளைகளுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சியுடன் கூடிய போதைப் பொருள் பாவனையைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வும் எமது செயலக உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான தாபன நடைமுறைகள் தொடர்பான பயிற்சி நெறி ஒன்று இன்று 08.05.2024 காலை 9.00 மணி 12.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இப் பயிற்சி நெறியின் வளவாளராக R.C.அமல்ராஜ் (உதவி ஆணையாளர்,தேர்தல்கள் திணைக்களம்,யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு பயன் மிக்க கருத்துக்களை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் தெளிவு படுத்தியிருந்தார்.

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்ற 60 குடும்பங்களுக்கு 120 பால்மா பொதிகள் நேற்று எமது அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தில் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.






