Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsNews & Events
Slideshow CK
Government Service Centers
Home
மாற்றாற்றலுடையோர் குழுவினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்
யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாற்றாற்றலுடையோர் குழுவினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று எமது பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.



பண்பாட்டு விழா!
15.12.2021 புதன்கிழமை வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் எமது யாழ்ப்பாண பிரதேச செயலகமும்,பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து பண்பாட்டு விழாவினை மிகவும் சிறப்பாக கொண்டாடியது. எமது பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது மதிப்பிற்குரிய யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கலந்து கொண்டார்.மேலும் பல அரச அதிகாரிகளும், அறிஞர்களும்,கலைத்துறை வல்லுனர்களும்,இளம் கலைஞர்களும்,கலை ஆர்வலர்களும் ,இந் நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர்.குறிப்பிட்ட முக்கிய கலை நிகழ்வுகளுடன் "யாழ் பாடி- 05"நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் "யாழ் ரத்னா" விருதினை 6 பேரும், ஓவியப் போட்டியின்3 பேரும்,இளம் கலைஞர் விருதினை 4 பேரும்,காணிச் சேவைக்கான விருதினை ஒருவரும் பெற்றிருந்தனர்.நமது யாழ்ப்பாணத் தமிழரின் புராதன கலை,கலாசார பண்பாட்டு விழுமியங்களில் உள்ள சிறப்புக்கள் ,அவற்றில் உள்ளடங்கியுள்ள கருத்துச் செறிவுகள்,அவற்றை பல வித கலைவடிவங்களில் வெளிக்கொண்டுவந்த கலைஞர்களின் படைப்பாற்றல்கள் பற்றி எடுத்துக் காட்டுக்களுடன் விவரிக்கப்பட்டு எல்லாவற்றையும் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணப்பாங்குகள் இவ் விழாவின் சாரம்சமாக எல்லோராலும் பேசப்பட்டது.வரலாற்று ரீதியில் யாழ் நகரம் பல சிறப்புக்களைக் கொண்டுள்ள அதேவேளை நகரத்தின் கலை கலாசார பண்பாடுகளுக்கு உயிர்ப்பூட்டும் வகையிலான பல செயற்பாடுகள் அன்று முதல் இன்று வரையும் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எமது யாழ்ப்பாண பிரதேச செயலகமும் இத்தகைய செயற்பாடுகளினூடாக தொடர்ந்தும் நம் பழந்தமிழர் பண்பாடுகளை நிலைநிறுத்த களம் அமைத்துக் கொடுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.









