Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsNews & Events
Slideshow CK
Government Service Centers
Home
தெரிவு செய்யப்பட்ட தையல் தொழில் தெரிந்த பெண் முயற்சியாளர்களுக்கான பயிற்சி
வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் பயிற்சி நெறியின் ஒரு அங்கமான சாறி பிளவுஸ் அலங்கார வடிவமைப்பு (Ari work) என்னும் பயிற்சி நெறி யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் J/ 63 கிராம சேவகர் பிரிவில் 24.11.2021-04.12.2021 வரையான நாட்களில் இடம்பெற்றது. எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட தையல் தொழில் தெரிந்த 15 பெண் முயற்சியாளர்களுக்கு இங்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.



மாற்றாற்றலுடையோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்
சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினத்தில் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர்பிரிவிற்குட்பட்ட மாற்றாற்றலுடையோர்களுக்கு சமூக சேவைத் திணைக்களத்தின் உதவியுடன் உலர் உணவுப் பொருட்கள் எமது பிரதேச செயலக திறந்த வெளி மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன.



மாற்றாற்றலுடையோர் சுய உதவிக் குழு இறுதி மாதாந்த கூட்டம்/.
யாழ்ப்பாண பிரதேச செயலக மாற்றாற்றலுடையோர் சுய உதவிக் குழுவின் 2021 ம் ஆண்டின் இறுதி மாதாந்த கூட்டம் கடந்த 03.12.2021 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் விடய உத்தியோகத்தர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு!
யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு வேலைத்தளங்களில் பால் மற்றும் பால் நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச் சூழலைக் கட்டியெழுப்புதல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு ஒன்று 03.12.2021 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் வளவாளராக திரு.ச.அறிவழகன் (பிரதான பயிற்றுவிப்பாளர்) கலந்து கொண்டு பல பயனுள்ள கருத்துகளை எடுத்துக் காட்டுகளுடன் தெளிவுபடுத்தினார்.இந்த பயிற்சி நெறிக்கு JSAC மற்றும் சொலிடாரிட்டி நிறுவனங்கள்அனுசரணையாளர்களாக கலந்து கொண்டு விடயம் சார்ந்த புத்தகம் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுதவினர்.







