கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் ,கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.அந்நாளில் எமது அலுவலகத்திலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வருடந்தோறும் தீபங்கள் ஏற்றுவது போல் இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்தினை ஏற்றி அலுவலகத்தினை தீப ஒளியில் அலங்கரித்திருந்தனர்.






