குடிவரவு மற்றும்‌ குடியகல்வுத்‌ திணைக்களத்தின்‌ கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ள உள்ள பொது மக்களுக்கான அறிவுறுத்தல்..........
குடிவரவு மற்றும்‌ குடியகல்வுத்‌ திணைக்களத்தின்‌ இடை நிறுத்தப்பட்டிருந்த கடவுச் சீட்டு விநியோக நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
சாதாரண சேவையின்‌ கீழ்‌ (ஒரு நாள்‌ சேவை தவிர்ந்த) மாத்திரம்‌ மே மாதம்‌ 9 ஆம்‌ திகதி திங்கட்‌கிழமை இன்று முதல்‌ மீண்டும்‌ ஆரம்பிக்கப்படவுள்ளன.
மே மாதம்‌ 9ஆம்‌ திகதி திங்கட்‌கிழமை, மே மாதம்‌ 5 மற்றும்‌ 6 ஆம்‌ திகதிகளில்‌ சாதாரண சேவையின்‌ கீழ்‌ கடவுச்சீட்டைப்‌ பெற்றுக் கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கிக்‌ கொண்ட,
மற்றும்‌ மே மாதம்‌ 05 ஆம்‌ திகதி சாதாரண சேவையின்‌ கீழ்‌ விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு வருகைத்தந்த, திணைக்களத்தினால்‌ இலக்கம்‌ அல்லது திகதி முத்திரையைப்‌ பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகளின்‌ விண்ணப்பங்கள்‌ மாத்திரம்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌.
மேலும்‌, மே மாதம்‌ 10 ஆம்‌ திகதி செவ்வாய்‌ கிழமை முதல்‌ கடவுச்சீட்டு விண்ணப்பங்களை
ஒப்படைப்பதற்கு திகதியையும்‌ நேரத்தையும்‌ ஒதுக்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்‌.
http://www.immigration.gov.lk/ எனும்‌ இணையத்தளத்திற்குப்‌ பிரவேசித்து அல்லது 0707101060 எனும்‌ தொலைப்பேசி இலக்கத்தை அழைத்து திகதியையும்‌ நேரத்தையும்‌ ஒதுக்கிக்கொள்ள முடியும்‌.
திணைக்களத்தின்‌ தலைமை அலுவலகத்தினால்‌ வழங்கப்படும்‌ ஏனைய சேவைகள்‌, பிராந்திய அலுவலகங்கள்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகள்‌ மற்றும்‌ விமான நிலைய குடிவரவு மற்றும்‌ குடியகல்வுச்‌ சேவைகள்‌ என்பன வழமை போன்று நடைபெறும்‌.
download 3
Scroll To Top