
யார் எல்லாம் இந்த உதவி பெறத் தகுதியானவர்கள்?..
பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய அடையாளங் காணப்பட்ட பயனாளிக்கு மே மாதம் தொடக்கம் யூலை மாதம் வரை குறித்த உதவிகளை வழங்கப்படவுள்ளது.
தகுதியானவர்கள்

70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முதியோர் கொடுப்பனவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ரூபா 2,000 இனை 3,000 ரூபாவால் அதிகரித்து 5,000 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.

70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் கொடுப்பனவிற்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு ரூபா 5,000 வழங்கப்படவுள்ளது.

100 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முதியோர் கொடுப்பனவாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ரூபா 5,000 இனை 2,500 ரூபாவால் அதிகரித்து 7,500 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.

மாற்று வலுவுடையோருக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ரூபா 5,000 கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரித்து 7,500 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.

காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்று வலுவுடையோருக்கு ரூபா 5,000 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

சிறுநீரக நோயாளிகளுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ரூபா 5,000 கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரித்து 7,500 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.

காத்திருப்பு பட்டியலில் உள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு ரூபா 5,000 வழங்கப்படவுள்ளது.

தற்பொழுது ரூபா 1,900 பெற்றுக் கொள்ளும் சமுர்த்தி பயனாளிகளுக்கு ரூபா 3,100 அதிகரித்து 5,000 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.

தற்பொழுது ரூபா 3,200 பெற்றுக் கொள்ளும் சமுர்த்தி பயனாளிகளுக்கு ரூபா 3,100 அதிகரித்து 6,300 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.

தற்பொழுது ரூபா 4,500 பெற்றுக் கொள்ளும் சமுர்த்தி பயனாளிகளுக்கு ரூபா 3,000 அதிகரித்து 7,500 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.

காத்திருப்பு பட்டியலில் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு ரூபா 5,000 வழங்கப்படவுள்ளது.