இன்று 04.02.2022 வெள்ளிக்கிழமை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரினால் காலை 8.19 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதத்துடனான மரியாதை செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.நாடு சுதந்திரமடைந்ததற்கு முன்னரான காலங்களும் சுதந்திரத்திற்கு பின்னர் நாடு எதிர் நோக்கிய சவால்களும் அதற்காக பாடுபட்டவர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறிய பிரதேச செயலாளர் குறிப்பாக கொவிட் 19 நிலமை காரணமாக சரிவடைந்த பொருளாதார நிலமையினை வலுப்படுத்தி அதன் மூலம் பொதுமக்களுக்கு நிறைவான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் சகல திட்டங்களையும் எமது பிரதேசத்தில் மிகவும் வினைத்திறன் மிக்க வகையில் நடைமுறைப் படுத்துவதற்கும், இன,மத பேதம் கடந்து நாம் அனைவரும் நாட்டின் இறைமைக்கும், முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி தற்போதைய நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க உறுதிபூணுவோம் எனவும் தனது உரையில் வலியுறுத்தினார்.தொடர்ந்து அலுவலகச் சூழலில் மரநடுகையும் இடம்பெற்றது.
இலங்கைத் திருநாட்டின் 74வது சுதந்திரதின நல்வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.








