நாடு முழுவதும் "கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம் வேலைத்திட்டம்"பற்றிய ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 03.02.2021 வியாழக்கிழமை எமது யாழ்ப்பாண பிரதேச செயலக செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு Zoom செயலியுடன் இணைந்து சிறப்பாக இடம்பெற்றது. கௌரவ அங்கஜன் இராமநாதன் ,பா.உ,பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் ,இணைத்தலைவர்,யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எமது யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ,பிரதம கணக்களர் ,உதவித்திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட 28 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இன்று சுபநேரமாகிய காலை 8.52 மணிக்கு இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இவ் வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் தேவைகள் பொதுமக்களாலேயே அடையாளங் காணக்கூடிய வகையில் பன்முகப்படுத்தப்பட்டு எதிர்காலத்திற்கான கிராமங்களின் அபிவிருத்தி வலுவாக்கப்படுகிறது எனலாம்.








