இசையால் தேசிய வெற்றியை அடைந்த யாழ்ப்பாண பிரதேச செயலக விழிப்புலனற்ற மாற்றுத்திறனாளி றெஜி றொபிஷன் கீர்த்தனாவுக்கு இனிய வாழ்த்துக்கள்.
"தடை அதை உடை" என்ற அர்த்தமுள்ள வார்த்தையின் விம்பம் அவள்.
வடமாகாணத்தில் 47 முழுமையான பார்வையிழந்த மிகவும் பரீட்சார்த்த இசைக்குழு பாடகர்களுடன் போட்டியிட்டு முதன்மையிடத்தை பெற்ற மிகச்சிறிய மாணவியாக தேசிய பயணத்தை தொடர்ந்தார்.
தேசிய அரையிறுதியில் 27 பெரும்பான்மை உள்ளடங்களான போட்டியாளர்களுடன் போட்டியிட்டு 85 புள்ளிகளைப்பெற்று வெற்றியீட்டி இறுதியாக
தேசியப் பாடல் போட்டி “ஸ்வர மஞ்சரி”
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பார்வையற்றோருக்கான தேசியப் பாடல் “ஸ்வர மஞ்சரி – 2026” (15.10.2026) பத்தரமுல்லை, ஸ்ருபாயா கட்டடத்தில் காலை 8.00 மணி போட்டியில் பங்குபற்றி இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தார்.
இவருக்கு விருதுக்கேடயம் மற்றும் ரூபாய் 75 000/-பணப்பரிசு, துறைசார் பட்டப்படிப்பை மேற்கொள்ள 5 ஆண்டுகள் புலமைபரிசிலும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு சமூக சேவைகள் திணைக்களத்தின் பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக கொழும்பு செல்லவதற்கான போக்குவரத்து தங்குமிட வசதிகளை யாழ்ப்பாண பிரதேச செயலாளரின் கோரிக்கையை ஏற்று Firmed நிறுவன அனுசரனைப்பெற்று அரசாங்க அதிபர் வழங்கியிருந்தார். அவருக்கும் இதயபூர்வமான நன்றிகள். ஆக்க பூர்வமான தேசிய அரங்கில் "அழகே அழகே" என்ற பாடல் வரிகளில் எம் தமிழ் மொழிக்கு வலு சேர்த்த யாழ்ப்பாண வாழ்வக மாணவியும் எமது பிரதேச செயலக மாற்றுத்திறனாற்றல் பொருந்திய மாணவியும் ஆன அவரை அக மகிழ்ந்து யாழ்ப்பாண பிரதேச செயலகம் வாழ்த்தி நிற்கிறது.
இவ்வெற்றி நாயகியை சமூக சேவை பணிப்பாளர் தர்சினி கருணரட்ண அவர்கள் அன்பாய் முத்தமிட்டு வாழ்த்துக்களை பரிமாறினார்.
அவருடைய வெற்றிப்யணத்திற்கு வழிகாட்டிய யாழ்ப்பாண பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், மாவட்ட சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் இணைப்பாளர் உமாசங்கருக்கும் நன்றிகள்.
ஒரு கால நகர்வின் கடுகதி வேகத்திற்கு முகம் கொடுத்த அவள் இசைப் பயணம் மடை திறந்த அருவி போல் தொடர் வெற்றிப் பயணமாகட்டும்.
#DSJaffna #Jaffna #மாற்றுத்திறனாளி









