நலன்புரி நன்மைகள் சபையின் உதவியானது தகுதியற்ற நபருக்கு வழங்கப்பட்டிருந்தால் அது தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு பொதுமக்கள் ஆகிய நீங்கள் எதுவித தயக்கமும் காட்டத்தேவையில்லை.
இதுவரை நீங்கள் தயக்கம் காட்டுவதற்குக் காரணம் முறைப்பாடுகளை வழங்குபவரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றினை கணணி முறைமையினுள் உள்ளிட வேண்டியுள்ளமையாகும். ஆகவே இதற்கு தீர்வாக நலன்புரி நன்மைகள் சபை மாற்றீட்டு வழி ஒன்றினை வழங்கியுள்ளது.
ஆட்சேபனை தெரிவிக்கும் நபரின் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் உள்ளிடாமல் முறைப்பாடுகளினை வழங்க முடியும்.
முறைபாட்டு படிவத்தின் ஆட்சேபனை பகுதியில் யாருக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கின்றாரோ அவரின் QR எண் , பெயர், மற்றும் எந்த விடயத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றார் ( வருமானம், வெளிநாட்டு உதவி, வாகனம், வேறு உடைமைகள் ) போன்ற விடயங்களை குறிப்பிட்டு நீங்கள்பிரதேச செயலகத்தில் படிவங்களை ஒப்படைக்கலாம்.
QR இலக்கம் மற்றும் அவ்விலக்கத்திற்குரிய பயனாளியின் பெயர் கட்டாயம் இடப்படல் வேண்டும். (கிராம சேவையாளர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பட்டியலில் QR இலக்கம் மற்றும் பெயர் உள்ளது ) அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட படிவங்கள் தனியானதொரு இணையத்தள முகவரியினூடாக பதிவுசெய்யப்படும்.
எனவே பொதுமக்களாகிய நீங்கள் தயக்கமின்றி ஆட்சேபனைகளை எதிர்வரும் 10.07.2023 வரை தெரிவிக்கமுடியும்.
 
artlogo 1
Scroll To Top