சர்வதேச போதைப்பொருள் துஸ்பிரயோக தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு!
சர்வதேச போதைப்பொருள் துஸ்பிரயோக தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையும் இணைந்து 26.06.2023 அன்று விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உதவி மாவட்ட செயலாளர் திருமதி கி.கமலராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வானது யாழ் குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோத்தியோகத்தர்கள்,சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர்கள்,அருட்தந்தைகள்,அருட்சகோதரிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது குடியிருப்பு தொடரில் உள்ள 270 குடுப்பங்களின் வீடுகளுக்கு சென்று 1927 இலவச சேவை இலக்கம் தொடர்பாகவும்,போதைப்பொருள் பாவனையின் தாக்கம் தொடர்பாகவும் தனித்தனியாக குடும்பங்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.மாலை நிகழ்வாக சிறுவர் இளையோரை பாதுகாத்தல் தொடர்பாகவும்,அவர்கள் திறன்களை மேம்படுத்தல் தொடர்பாக அக்கிராமத்தில் உள்ள தலவைர்களுடன் கலந்துரையாடினர்.
0x
Scroll To Top