எமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு " பாதீனியம் அகற்றலும் மைதான சிரமதானமும் செய்யும் நிகழ்வும்" 23.01.2023 அன்று காலை 7.00 மணியளவில் யா/ கதீஜா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இங்கு பரம்பியிருந்த பாதீனியம் சுகாதார முறைப்படி அகற்றப்பட்டு எரித்தழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் மைதானத்தின் புற்கள் வெட்டியகற்றப்பட்டன. இதில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் , பெற்றோர்கள் சமுக மட்ட அமைப்புக்கள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






