கடந்ந 29.10.2022 சனிக்கிழமை அன்று யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் காலை 8.00 மணிக்கு நடைபெற்ற வடக்கு மாகாணப் பண்பாட்டு பெருவிழாவில் துறை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பத்துக் கலைஞர்கள் கலைக்குரிசில் விருது,இளங்கலைஞர் விருது,சிறந்த நூலுக்கான விருது என்பன வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். இக் கலைஞர்கள் எமது பிரதேசத்தில் கலை, இலக்கிய,பண்பாட்டுத் துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்பிற்காக பெற்றுக் கொண்ட இவ் விருதுக் கௌரவிப்பிற்கு எமது பிரதேச செயலகத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், தொடரந்தும் இவர்கள் தமது பணியில் எமது பிரதேச கலை,இலக்கிய, பண்பாட்டுத் துறைகளுக்கு பங்காற்ற வேண்டும் என்பது எமது விருப்புமாகும்.விருதைப் பெற்றுக் கொண்ட கலைஞர்கள் விபரம்:-
திரு.யோசப் யோண்சன் ராஜ்குமார்- சிறந்த நூலிற்கான விருது
கலைக்குரிசில் விருது:-
திரு.செபஸ்தியாம்பிள்ளை யோசப்பாலா-சிறுகதை
திரு.கிளமென்ற் மாட்டீன் நெல்சன்-நாடகம்
திரு.அறுக்காஞ்சிப்பிள்ளை மரியதாஸ்-கூத்து
திரு.சரவணமுத்து முருகையா-கவிதை இலக்கியம்
திரு.பிரான்சிஸ் டொமினிக்-ஒப்பனைக்கலை
இளங்கலைஞர் விருது:-
திரு.றோயல் வின்ஸ்டன் ஜெறாட் நிரோஷன்-குறும்படம்
திருமதி.கிருஷ்ணாலினி அகிலன்-வாத்தியக்கலை
திருமதி.மேவிஸ் ஜீன்சியா யூட் அல்போன்சஸ்-கூத்து
செல்வி.தர்சினி ஞானேந்திரன்-கிராமியக்கலை





