பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம் - செய்திகள்

குடியுரிமை சாசனம்

தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலையால் பெருமளவு இலங்கை மக்கள் பாதிப்புற்று வருவதைத் தொடர்ந்து அவர்களையும்,நமது நாட்டையும் கொடிய நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டி கௌரவ பிரதமர் மகிந்த இராஜபக்சவின் ஆலோசனைக்கமைய எமது பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கிய ஆலயங்களில் 08.05.2021 சனிக்கிமை விசேட ஹோம வழிபாடுகளும் பூஜை நிகழ்வுகளும் நடைபெற்றன.

pooja8

pooja2

pooja1

பிரம்புகள் ,பித்தளை,மட்பாண்டங்கள்,மரப்பொருட்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் 2021 ஆம் ஆண்டிற்கான "ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு கிராமிய கைத்தொழில் முயற்சியாளரை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்" எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வீடு சார்ந்த கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான நேர்முகத் தேர்வு 20.04.2021 காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக சிறு மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்றது.விதாதா வள நிலையத்துறையினரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் புதிய கிராமியத் தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு அவர்களது தொழில் வாயப்பினை விருத்தி செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களது சுய விபரங்களும்,உற்பத்திகளும் இந் நேர்முகத்தேர்வில் கவனம் செலுத்திப் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன.
 
industrees 6
 
industrees 2
 
industrees 3
 
Narasingaperumal Ramanapirakash, Rtr Ruku Kabi and 12 others
 
2 Shares
 
Like
 
 
 
Comment
 
 
Share
 
 
எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் தனிமை படுத்தபட்ட மற்றும் வறுமைக்குட்பட்ட 10 குடும்பங்களுக்கு திருமதி.மாணிக்கராஜ் ராணி மற்றும் பிரான்ஸ் வாழ் நண்பர்கள் மூலம் உலர் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு பொது சுகாதார பரிசோதகரால் வழங்கி வைக்கப்
ப்பட்டன.
Covid food. 812
 
koddai1
Covid food. 7

J/77 மருதடி கிராம அலுவலர் பிரிவில் 20-04-2021 பிற்பகல் 3.00 மணிக்கு கிராம அபிவிருத்திக்குழு கூட்டமும் அதனைத் தொடர்ந்து மாதர் கிராம அபிவிருத்தி சங்க பொதுக் கூட்டமும் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் எமது கிராம அபிவிருத்தி உத்தியோகதர், கிராம அலுவலர், கிராம மாதர் சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

commity meeting 1

commity meeting 2

commity meeting

எமது அலுவலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கு படுத்தலின் கீழ் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளான உத்தியோகத்தர்களுக்கான கைவிசேடம் வழங்குதலும், உத்தியோகத்தர்கள் பங்குபற்றுதலுடனான பொங்கல் நிகழ்வும் மிகவும் சிறப்பாக இடம் பெற்றன.

april new year.9

april new year.12

april new year.7

Scroll To Top