சர்வதேச குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குருநகர் மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் குருநகர் இளையோர் மன்றம், குருநகர் நலன்புரி சங்கம்,மாவட்ட இளைஞர் சம்மேளனம் பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்கள் பொது அமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்புடன் 30 நாட்களில்1000 குருதி கொடையாளர்களை இணைக்கும் "இரத்ததான முகாம்"செயற்றிட்டம் 09.06.2021 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி 12.30 மணியளவில் 30 குருதி கொடையாளர்கள் பங்களிப்புடன் யாழ்ப்பாண இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ச.சந்தோஸ் வழிகாட்டலில் குருநகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இம் முகாமில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.இந்த அசாதாரண சூழலிலும் இவர்களின் உயிர் காக்கும் உன்னத பணிக்கு நாம் பணிந்து நன்றி கூறுகிறோம்.
 
kurunagar.jpg 4
 
kurunagar.jpg 5
 
kurunagar.jpg 6
 
 
 
 
 
 
 
 
 
kurunagar.jpg 4
 
 
Scroll To Top