எமது பிரதேச செயலகத்தில் 2020.10.08 வியாழக்கிழமை பி.ப 2.30 மணிக்கு எமது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச மட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய பொறுப்பதிகாரி ,பொதுச் சுகாதாரப் பரிசோதகர்,பொலீஸ் பொறுப்பதிகாரி,உதவிப் பொலிஸ் அதிகாரி ,நிர்வாகக் கிராம அலுவலர் ஆகியோர் பங்குபற்றினர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலமை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலிற்கு அமைய இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதேச செயலாளர் இவ் விடயத்தில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கூடிய கவனம் எடுக்குமாறு வலியுறுத்தினார்.இந் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் நடைமுறைகளை பொதுமக்கள் மறு அறிவித்தல் வரை பின்பற்றுவதை கண்காணிக்குமாறும் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
01-முகக் கவசம் அணிதல், சமூக
இடைவெளியை பேணுதல், அடிக்கடி
கைகளைக் கழுவுதல் ,வருகை தருவோரது
வெப்பநிலை அளவிடல் ,50 பேருக்கு குறைவானோர்
பங்குபற்றுதலை உறுதிப்படுத்தல் போன்ற
அடிப்படை சுகாதார விதிகளை
அனைத்து இடங்களிலும்
பின்பற்றுதல்.
02-பொதுப் போக்குவரத்தில்
இருக்கைகளுக்கு அளவான
பயணிகளுடன் மாத்திரம் பயணித்தல்,முகக் கவசம்
அணிதல்,கைகளை சுத்தப்படுத்தும் திரவத்தினை
பயணிகள் பயன்படுத்திய பின் பேரூந்தினுள்
அனுமதித்தல்
03-தனியார் வகுப்புகள் நடத்துவது
முற்றாகத்தடை செய்தல்
04-பொது மக்கள் கூடுகின்ற நிகழ்வுகள்
களியாட்டங்கள், அன்னதானங்கள்,இசை
நிகழ்சிகளை முற்றாகத்தடை செய்தல்.
05. மக்கள் அதிக அளவு ஒன்றுகூடும் கூட்டங்கள், மாநாடுகளை தவிர்த்தல்.
06-பூங்காக்களை பொதுமக்கள்
பாவிப்பது முற்றாக தடை
செய்தல்.
07. சமூக இடைவெளியுடனான மத வழிபாடுகளை நடாத்துதல்.
தொடர்ந்து எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நடைபாதை வியாபாரங்களை தடைசெய்தல்,புகையிரதநிலையங்கள், தபாலகங்கள்,வங்கிகளில் உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல் சம்மந்தமாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
 
go1
go2

News & Events

30
நவ2020
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால்  தறப்பாள் வழங்கல்

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் தறப்பாள் வழங்கல்

தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழைகாரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட...

குடியுரிமை சாசனம்

முக்கிய அறிவித்தல்................

முக்கிய அறிவித்தல்................

வட மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது இதனால்...

30
நவ2020
அன்னை பூமலர் அறக்கட்டளை நிலையத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கல்

அன்னை பூமலர் அறக்கட்டளை நிலையத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கல்

J/88 புதிய சோனகதெரு கிராம அலுவலர் பிரிவில் அன்னை...

30
நவ2020
முதியோர் தினத்னை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி

முதியோர் தினத்னை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி

2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச முதியோர் தினத்னை முன்னிட்டு...

30
நவ2020
முதியோர்,மாற்றாற்றலுடையோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

முதியோர்,மாற்றாற்றலுடையோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

முதியோர் மற்றும் மாற்றாற்றலுடையோர் தினத்தை முன்னிட்டு எமது யாழ்ப்பாண...

30
நவ2020
விதை நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வு

விதை நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வு

எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்...

30
நவ2020
வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான மரக்கன்றுகள்

வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான வீட்டுத்தோட்ட பயனாளிகளிற்கான மரக்கன்றுகள்

எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்...

09
நவ2020
 விழிப்புணர்வு நிகழ்வு (Lions Clubs of Jaffna Golden Star)

விழிப்புணர்வு நிகழ்வு (Lions Clubs of Jaffna Golden Star)

J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் Lions Clubs...

09
நவ2020
விசேட பிரார்தனைகள் நிகழ்வுகள்

விசேட பிரார்தனைகள் நிகழ்வுகள்

முழு நாட்டையும்,நாட்டு மக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாத்து...

09
நவ2020
வாழ்வாதார  உதவிகள் வழங்கல்

வாழ்வாதார உதவிகள் வழங்கல்

J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் மீனாட்சி மாதர்...

03
நவ2020
மரக்கன்றுகள் நாட்டல்

மரக்கன்றுகள் நாட்டல்

வனவள இராஜாங்க அபிவிருத்தி அமைச்சின் 24.09.2020 சுற்றுநிரூபத்திற்கமைய வளர்ந்து...

Scroll To Top