யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை 8.45 மணிக்கு இடம்பெற்றது.கோவிட் 19 கட்டுப்பாடுகளுக்கு அமைய கிளைகள் ரீதியாக உத்தியோகத்தர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்நிகழ்வுக்காக கூடியிருந்தனர். தேசியக் கொடியேற்றுதலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.பொதுசுகாதாரப் பரிசோதகரின் கோவிட் 19 தொடர்பான உரை இடம்பெற்றது.தொடர்ந்து நமது யாழ்ப்பாண பிரதேச செயலாளரின் உரை இடம்பெற்றது.கடந்த ஆண்டு பல சாவால்களைக் கடந்து பொதுமக்களுக்காக தன்னுடன் இணைந்து பணியாற்றிய உத்தியோகத்தர்களுக்கு அவர் நன்றிகள்தெரிவித்ததுடன் இவ்வாண்டிலும் பொதுமக்களுக்காக அர்ப்பணிப்பான கடமைகளை அவர்கள் தன்னுடன் இணைந்து ஆற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.