நமது யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதேச செயலகத்தால் பல வகையான வாழ்வாதார மூலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அவற்றைக் கொண்டு அவர்களால் உற்பத்தி செய்யப்படும் கைப்பணிப் பொருட்ளை சந்தைப்படுத்தி வருமானத்தைை ஈட்டுவத்கான வழிமுறையாக இன்று பிரதேச செயலகத்தில் சந்தைப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. பழக்கன்றுகள் ,மரக்கறிகள் ,தோல் மற்றும் துணிகளாலான கைப்பை வகைகள்,கைத்தறிமூலம் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான புடவைகள், சட்டைகள், போர்வைகள், துவாய்கள் ,கைக்குட்டைகள் ,சிறுவர்களுக்கான காற்சட்டைகள் ,துணிகளைத்துவைக்கும் சலவைக்கரைசல்கள் போன்ற உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் பெருமளவான உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பொருட்களைக்கொள்வனவு செய்திருந்தனர். இச்சந்தை மாதாந்தம் தொடர்ந்து நடைபெறும் எனவும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

indus

indus9

indus7

 

News & Events

16
අප්‍රේ2021
அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

அலுவலக சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

எமது அலுவலகத்தில் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கு படுத்தலின் கீழ்...

15
අප්‍රේ2021

கோவிட் -19

Scroll To Top