மதிப்பிற்குரிய பொதுமக்களே...
2020ம் ஆண்டிற்குரிய வாக்காளர்களை மீளாய்வு செய்யும் பணி தற்பொழுது நடைபெறுவதுடன் அதற்குரிய படிவங்கள் எங்களது கிராம அலுவலர்களினால் பொதுமக்களிற்கு உரிய முறையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.எமது பிரதேச செயலாளர் பிரிவவைச் சேர்ந்த வாக்காளர் பதிவினைக் கொண்ட பொதுமக்கள் தங்கள் பிரிவு கிராம அலுவலர்களினால் விநியோகிக்கப்படும் வாக்காளர் பதிவிற்கான விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் அதனை தெளிவாக பூரணப்படுத்தி ஒப்படைக்குமாறு தயவுடன் வேண்டி நிற்கின்றோம்.இவ் விடயத்தில் எங்களது கிராம அலுவலர்களுக்கு தாங்கள் வழங்கும் ஒத்துழைப்பினை மிக உயர்வாக நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.இவ் விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள தங்கள் பிரிவு கிராம அலுவலரை அணுகவும் அல்லது அதிநவீன வசதிகளுடன் இயங்கும் எமது Public Helpdesk சேவையினைப் பயன்படுத்தவும்.
 
election
Scroll To Top