புதிதாக அமைக்கப்பட்ட யாழ் கதீஜா மகா வித்தியாலய கட்டட திறப்பு விழா கல்லூரி அதிபர் ஜனாபா ஜான்சி கபூர் அவர்களால் 15.01.2020 புதன்கிழமை மு.ப 11.45 மணியளவில்  உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.கடந்த சில வருடங்களாக யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் உள்ளக வளாகத்தில் இப் பாடசாலை தற்காலிகமாக இயங்கி வந்தது. அதனடிப்படையில் இந்திய அரசின் நிதி உதவியில் கடந்த 2017.07.19 ஆம் திகதி குறித்த பாடசாலைக்கான கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது அதன் பணிகள் நிறைவடைந்து  உத்தியோக பூர்வமாக திறந்து மாணவர்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் முதல் அம்சமாக கதீஜா மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவர்களால் பாண்ட் (டீயனெ) வாத்தியம் மூலம் கௌரவமாக நடை பவணியாக ஒஸ்மானியா முன்றலில் இருந்து கதீஜா மகாவித்தியாலயம் வரை அழைத்துவரப்பட்டு பாடசாலை முன்றலில் மொளலவி ஏ.எம்.ஏ அஸீஸ் மற்றும் மௌலவி முஜாஹித் ஆகியோரால் இறை பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டு, ஒஸ்மானியாக் கல்லூரி அதிபரால் வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டு பின்னர் அதிபரால் நினைவுக் கல் திரை நீக்கம் செய்யப்பட்டு அதிபரின் தலைமையுரையுடன் கூடிய வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசேட உரைகளாக யாழ் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லூரி பிரதி அதிபரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது. நிகழ்வுகளை கல்லூரி ஆசிரியை திருமதி சுபத்திரா திருசாந்த் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1990ஆம் ஆண்டிற்குப் பின்னர் கதீஜா மகாவித்தியாலயத்தின் மீள் உருவாக்கம் குறித்து யாழ்ப்பாணம் முஸ்லீம் சமூகம் சிந்தித்த பொழுது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து, பல தியாகங்களை செய்து எமது பாடசாலையை மீள உருவாக்குவதற்கு தன்னாலான பங்களிப்புக்களை வழங்கிய அதிபர் ஜனாபா ஜான்சி கபூர் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஒத்துழைப்புக்களையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்வது அவசியமான ஒன்றாகும். காரணம் எவருமே பொறுப்பேற்று பாடசாலையை ஆரம்பிக்க முன்வராத சந்தர்ப்பத்தில் துணிந்து பொறுப்பேற்று பாடசாலையை ஆரம்பிக்க முன்வந்த அதிபரின் தன்னம்பிக்கையும், தைரியமும் மற்றும் அதிபரின் குடும்பத்தின் ஒத்துழைப்புக்களும், பங்களிப்புக்களுமே ஒஸ்மானியா வளாகத்தில் ஹதீஜா மகா வித்தியாலயம் தற்காலிகமாக ஆரம்ப கட்டமாக இயங்குவதற்கும், அதன் மூலம் அதற்கான புதிய கட்டடத்தை விரைவாக கொண்டு வந்து சேர்ப்பதற்கும் உறுதுணையாக இருந்தது. அதிபரின் வழமை போன்ற சிறந்த நிர்வாகக் கட்டமைப்பும், தொழிற்பாடும் தொடர்ந்தும் காணப்படும் என்ற எதிர்பார்ப்புடன், யாழ் மாவட்டத்தில் பல்வேறு சாதனைகளை எதிர்காலத்தில் இப் பாடசாலை மாணவர்கள் பெற்று எமது சமூகத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எம் மத்தியில் என்றும் இருக்கின்றது. அல்லாஹ்வின் அருளோடு நிச்சயம் சிறந்த பாடசாலையாக அதிபரின் வழிகாட்டலில் இயங்குவதற்கு சமூகமாக கூட்டாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பங்களிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் தொடர்ந்தும் அதிபருக்கும், பாடசாலை சமூகத்திற்கும் வழங்குவார்கள் என்பது இன்றய நிகழ்விலிருந்து வெளி உலகிற்கு நாம் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

கல்லூரி அதிபர் ஜனாபா ஜான்சி கபூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், யாழ் - நல்லூர் கோட்டப் பணிப்பாளர்கள், யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள், யாழ் மாநகரசபை சபை முன்னாள், இன்னாள் முஸ்லிம் உறுப்பினர்கள், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் ஜனாப் சேகு ராஜிது அவர்கள், ஒஸ்மானியாக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், கதீஜா மகா வித்தியாலய ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவிகள், தற்பொழுது கல்வி பயிலும் மாணவிகள், யாழ் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபைப் பிரிதிநிதிகள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜே 86 மற்றும் ஜே 87 கிராம சேவையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், விளையாட்டுக் கழகப் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.இந்திய அரசின் நிதிப் பங்களிப்பில் ஐந்து பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் ஒரே நேரத்தில்  திறந்து வைக்கப்ட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

kath6

kath2

kath5

 

News & Events

14
Feb2020
Career Guidance

Career Guidance

The Career Guidance and Psychometrics test for...

12
Feb2020
பிரதேசசெயலகநலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில்இரத்ததானநிகழ்வு

பிரதேசசெயலகநலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில்இரத்ததானநிகழ்வு

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்...

News & Events

12
Feb2020
பிரதேசசெயலகநலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில்இரத்ததானநிகழ்வு

பிரதேசசெயலகநலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில்இரத்ததானநிகழ்வு

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்...

11
Feb2020
உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வு

உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வு

J/69  றெக்கிளமேசன் மேற்கு  கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட...

10
Feb2020
ஒருங்கிணைந்த வீதி   காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்

ஒருங்கிணைந்த வீதி  காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்

ஒருங்கிணைந்த வீதி  காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுண்டுக்குளி...

10
Feb2020
   குருநகர் இடிதாங்கிக்கு  கொங்கிறீற் இடும்  பணி

குருநகர் இடிதாங்கிக்கு கொங்கிறீற் இடும்  பணி

குருநகர் கடலில் உள்ள இடிதாங்கியின் மேலதிக பாதுகாப்பிற்காக அதன்...

10
Feb2020
சமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள்   வழங்கல்

சமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள் வழங்கல்

2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை சமுக பாதுகாப்பு ஓய்வூதிய...

07
Feb2020
பதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா

பதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...

05
Feb2020
பிரதேச விளையாட்டு விழா-2020

பிரதேச விளையாட்டு விழா-2020

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...

05
Feb2020
புள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான கணக்கெடுப்பு

புள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான கணக்கெடுப்பு

புள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான...

05
Feb2020
சுதந்திரதினத்தை முன்னிட்டு உதைப்பந்தாட்டப்போட்டி

சுதந்திரதினத்தை முன்னிட்டு உதைப்பந்தாட்டப்போட்டி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ம் தேசிய...

04
Feb2020
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர...

03
Feb2020
 வீட்டிற்கான அடிகல்நாட்டு நிகழ்வு

வீட்டிற்கான அடிகல்நாட்டு நிகழ்வு

J/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் கிராமத்துக்கு வீடு...

Scroll To Top